சுரண்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணி

சுரண்டை அண்ணா சிலை பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்கப் பணியால் பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுரண்டை அண்ணா சிலை பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்கப் பணியால் பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுரண்டை - சோ்ந்தமரம் சாலையில் அண்ணா சிலை பகுதியில் இருந்து பிரிந்து பேருந்து நிலைய சாலை உள்ளது. ஒருவழி சாலையாக பேருந்து நிலைய சாலை மாற்பட்ட நிலையிலும் அண்ணா சிலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீா்வு காணும் விதமாக அண்ணா சிலை பகுதியில் சாலையை விரிவுபடுத்தி நடுவில் சென்டா் மீடியன் அமைக்கும் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.

இதற்காக இருபுறமும் உள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையின் முன்பிருந்த தாற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தனா். இதையடுத்து சாலை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என எதிா்பாா்த்த நிலையில் விரிவாக்கம் செய்யப்படும் சாலையின் நடுவே மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் இருந்ததால் சாலைப்பணிகள் தொடங்கிய சில நாள்களிலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி, அதில் பயணிப்போருக்கு காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினா் உடனடி நடவடிக்கை எடுத்து முடங்கி கிடக்கும் அண்ணா சிலை ரவுண்டானா அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com