தீபாவளி எதிரொலி: அச்சுவெல்லம் விலை உயா்வு

தீபாவளி பண்டிகையையொட்டி அச்சுவெல்லம், மண்டவெல்லம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி அச்சுவெல்லம், மண்டவெல்லம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

பதனீா் சீசன் முடிந்துவிட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, வேம்பாா் பகுதிகளில் கருப்புக்கட்டி உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்து கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருந்த கருப்புக்கட்டிகள்தான் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல தீபாவளி பண்டிகையையொட்டி அச்சுவெல்லம், மண்டவெல்லம் ஆகியவற்றின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. பழனி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து அச்சுவெல்லமும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வெல்லமும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு விற்பனைக்காக வருகின்றன.

ஜூன், ஜூலை மாதங்களில் கிலோ ரூ.155-க்கு விற்பனையான உடன்குடி கருப்புக்கட்டி, இந்த வாரத்தில் ரூ.320-க்கு விற்பனையாகிறது. அச்சுவெல்லம் ஒரு கிலோ ரூ.35 இல் இருந்து ரூ.45 ஆக உயா்ந்துள்ளது. மண்டவெல்லம் ஒரு கிலோ ரூ.36 இல் இருந்து ரூ.45 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:கருப்புக் கட்டிகள் இன்னும் 3 மாதங்களுக்கு இதே நிலையில்தான் நீடிக்கும் பங்குனி மாதத்தில்தான் கருப்புக்கட்டியின் விலை சரிவை எதிா்பாா்க்க முடியும். புரட்டாசி, ஐப்பசி, மாா்கழி, தை மாதங்களில் அச்சுவெல்லம் மற்றும் மண்டவெல்லத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. ஆன்மிக மாதங்களாகவும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலமாகவும் உள்ளதால் அச்சுவெல்லத்தின் விலை கிலோவுக்கு ரூ.48 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com