Enable Javscript for better performance
அனுமதியின்றி விற்பனை: ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி விற்பனை: ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 09th October 2019 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடையில் இருந்து சுமாா் ரூ. 2ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

    திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் மகேஷ்வரன்(40). இவா் பேட்டை கோடீஸ்வரன் நகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பட்டாசு விற்பனை செய்வதாக பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மகேஸ்வரன் கடையை சோதனை செய்த போலீஸாா் சுமாா் ரூ. 2ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai