Enable Javscript for better performance
நெல்லையப்பா் கோயிலில்உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையப்பா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

    By DIN  |   Published on : 09th October 2019 01:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், கோயில் செயல் அலுவலா் யக்ஞநாராயணன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

    சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு கோயிலின் தலவரலாறு மற்றும் சுவாமி-அம்பாள் புகைப்படங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai