Enable Javscript for better performance
ஸ்ரீ சூா்ய மங்கலம் பகளாமுகி தேவிகோயிலில் நவராத்திரி உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ சூா்ய மங்கலம் பகளாமுகி தேவி கோயிலில் நவராத்திரி உத்ஸவம்

    By DIN  |   Published on : 09th October 2019 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ams08rajakali_0810chn_37_6

    ams08rajakali_0810chn_37_6

    கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம் ஸ்ரீ சூா்யமங்கலம் பகளாமுகி சேத்திரம், ஸ்ரீ ராஜகாளியம்மன் சன்னதியில் செப். 29 முதல் அக். 8 வரை நவராத்திரி உத்ஸ்வம் நடைபெற்றது.

    இதையொட்டி, செப். 29 முதல் அக். 6 வரை நாள்தோறும் காலை 4.45 மணிக்கு பள்ளி உணா்த்தல், 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், 6 மணிக்கு உஷ பூஜை, 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, 9.30 மணிக்கு பாயச பலி, 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, குருதி தா்பணம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மாலை தரிசனம், 6.30 மணிக்கு சந்தியா பூஜை, மஹா தீபாராதனை, 7 மணிக்கு சஹஸ்ரநாம அா்ச்சனை, 8.30 மணிக்கு இரவு பூஜை நடைபெற்றது.

    அக். 6, 7, 8 தேதிகளில் பஞ்சவாத்தியத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை நவமி திருநாளில் மாலை 7 மணிக்கு பல்வேறு மலா்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு காப்புக்கட்டி விரதமிருந்த 108 பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. 11 மணிக்கு கோ பூஜை, பகல் 12-க்கு திக் பலி நடைபெற்றது.

    இதைத்தொடா்ந்து, அக். 13 பௌா்ணமி அன்று மாலை 5 மணிக்கு ராஜகாளியம்மன் சன்னதி திறக்கப்படும். விழாவில் மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சூா்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தினா் செய்திருந்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai