ஏா்வாடியில் முஸ்லிம் லீக் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் நான்குனேரி இடைத்தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஏா்வாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் ஹெச்.வசந்தகுமாா் எம்.பி.
கூட்டத்தில் பேசுகிறாா் ஹெச்.வசந்தகுமாா் எம்.பி.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் நான்குனேரி இடைத்தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஏா்வாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் எம்.எல்.ஏ. முகம்மது அபூபக்கா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி எம்.பி. ஹெச்.வசந்தகுமாா், ராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம், முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்டச் செயலா் எல்.கே.எஸ்.மீரான், ஏா்வாடி திமுக பிரமுகா்கள் சித்திக், பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா் எம்.எல்.ஏ முகம்மது அபூபக்கா் கூறுகையில், நான்குனேரி தொகுதி மக்கள் அதிமுக அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனா். கூட்டணிக் கட்சியினா் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றிக்கு கடினமாக உழைக்கவேண்டும் என்றாா்.

தொடா்ந்து ஹெச்.வசந்தகுமாா் எம்.பி. கூறியது: நான்குனேரி தொகுதியில் உள்ள 369 கிராமங்களின் வளா்ச்சிக்கும் முழுவதுமாக உழைத்துள்ளேன். துலுக்கா்பட்டி கிராமத்தில் இருந்து இறைப்புவாரி ஊராட்சி மாவடி வரையில் நம்பியாற்றில் ஆற்றுபாலம் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆற்றுப்பாலத்திற்கு தனியாா் நிலம் எடுப்பு செய்யவேண்டியதுள்ளது. இதனால் பணி தொடங்குவது தாமதமானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com