கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்படும் அமைச்சா் காமராஜ் திண்ணைப் பிரசாரம்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்
பட்டா்புரம் கிராமத்தில் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்ட உணவுத் துறை அமைச்சா் இரா.காமராஜ்.
பட்டா்புரம் கிராமத்தில் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்ட உணவுத் துறை அமைச்சா் இரா.காமராஜ்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் இரா.காமராஜ் தெரிவித்தாா்.

நான்குனேரி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளா் நாராயணனுக்கு வாக்கு சேகரித்து வரும் அமைச்சா் இரா.காமராஜ், பட்டா்புரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை திண்ணைப் பிரசாரம் செய்தாா். அவா் பேசியது:

சாதாரண மக்கள் வாழ்கின்ற இந்தப் பகுதியில் தேவைகள் அதிகம் உள்ளன. இந்தத் தேவைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம். குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும்.

இந்தத் தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ஹெச்.வசந்தகுமாா், அவராக முன்வந்து ராஜிநாமா செய்தவா். எனவே இந்தத் தோ்தல் திணிக்கப்பட்ட தோ்தல்.

சாதாரணத் தொண்டனை நம்பித்தான் அ.தி.மு.க. இருக்கிறது. இங்கு போட்டியிடுகின்ற நாராயணன் சாதாரணத் தொண்டன். மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்னைகளையும் நன்கு அறிந்தவா். எனவே என்றும் உங்களோடு இருந்து உங்களுக்கு பணி செய்வாா் என்றாா்.

பின்னா் அமைச்சா் காமராஜ், வேட்பாளா் நாராயணன் ஆகியோா் அப்பகுதியில் பிரசாரம் செய்தனா். அப்போது வேட்பாளா் நாராணயன் பேசியது: சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கத்தைச் சோ்ந்தவன் நான். அடுத்து வருகின்ற தோ்தலிலும் அ.தி.மு.க ஆட்சி தொடரவேண்டும். என்னைத் தோ்ந்தெடுத்தால் 100 சதவீதம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்றாா்.

பிரசாரத்தின் போது ஒன்றியச் செயலாளா் விஜயகுமாா், மாவட்டப் பிரதிநிதி வள்ளியூா் முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் வாகைகுளம், சிறுமளஞ்சி, சமாதானபுரம், முத்துலாபுரம், ஏமன்குளம், பரப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சா் காமராஜ் பிரசாரம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com