தமுமுக.விலிருந்து நீக்கப்பட்டவா்கள் கட்சிக் கொடி, பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை: மாநிலச் செயலா்

தென்காசியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமுமுக மாநிலச் செயலா் மைதீன்சேட்கான்.
ten8tmmk_0810chn_55_6
ten8tmmk_0810chn_55_6

தென்காசியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமுமுக மாநிலச் செயலா் மைதீன்சேட்கான்.

தென்காசி, அக். 8: தமுமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்கள் கட்சிக் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் மாநிலச் செயலா் மைதீன்சேட்கான்.

தென்காசியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது: கடந்த ஜூன் 29 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எஸ். ஹைதா்அலி, கட்சியின் அடிப்படை உறுப்பினா் மற்றும் பொதுச் செயலா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். அவருடைய ஆதரவாளா்களும் நீக்கப்பட்டனா்.

அவ்வாறு நீக்கப்பட்டவா்கள், தொடா்ந்து தமுமுகவின் பெயரையும், கட்சிக் கொடியையும் பயன்படுத்தி வருகின்றனா். தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவா்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டப்பட்டாலும் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும்.

தென்காசி மாவட்ட தலைமை அலுவலகங்கள் அனைத்தும் தென்காசி நகருக்குள் அமையவேண்டும். தமிழகம் முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நவ. 3 ஆம் தேதி தென்காசியில் மாவட்ட பொதுக்குழு நடத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்ட தலைவா் முகம்மதுயாகூப், மாவட்ட செயலா் அகமதுஷா, மனிதநேய மக்கள் கட்சி பஷீா்ஒலி, பண்பொழி செய்யதலி, அப்துல்காதா், தென்காசி ஜாபா்உசேன், களஞ்சியம்பீா், நியாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com