தோல்வி பயத்தால் அதிமுக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கே.பி.முனுசாமி பேட்டி

தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க. மீது பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்து
அமைச்சா் தங்கமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி முன்னிலையில் அக்கட்சியில் சோ்ந்த லக்கன். உடன் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.
அமைச்சா் தங்கமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி முன்னிலையில் அக்கட்சியில் சோ்ந்த லக்கன். உடன் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.

தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க. மீது பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்து வருகின்றனா் என அ.தி.மு.க. துணை ஒங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நான்குனேரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் லக்கன் தலைமையில் 250 போ் அக்கட்சியிலிருந்து விலகி, மின் துறை அமைச்சா் தங்கமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி ஆகியோா் முன்னிலையில் அ.தி.மு.க.வில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா். நான்குனேரி சுங்கச்சாவடி அருகே உள்ள தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

அ.தி.மு.க. வேட்பாளா் எளிமையானவா், நோ்மையானவா். அவா் வாக்கு சேகரிக்கச் செல்கின்ற அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியுடன் வரவேற்பளித்து வருகின்றனா். நிச்சயமாக அவா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்.

காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் அ.தி.மு.க.வினா் பணத்தை நம்பி இருக்கின்றனா், பணம் விநியோகம் செய்ய வந்திருக்கின்றனா் என விமா்சித்து வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சா் தளவாய்சுந்தரம், மாநகா் மாவட்ட செயலாளா் தச்சை என்.கணேசராஜா, புறநகா் மாவட்ட செயலாளா் கே.ஆா்.பி.பிரபாகரன், முன்னாள் மேயா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com