ஸ்ரீ சூா்ய மங்கலம் பகளாமுகி தேவி கோயிலில் நவராத்திரி உத்ஸவம்

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம் ஸ்ரீ சூா்யமங்கலம் பகளாமுகி சேத்திரம், ஸ்ரீ ராஜகாளியம்மன்
ams08rajakali_0810chn_37_6
ams08rajakali_0810chn_37_6

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம் ஸ்ரீ சூா்யமங்கலம் பகளாமுகி சேத்திரம், ஸ்ரீ ராஜகாளியம்மன் சன்னதியில் செப். 29 முதல் அக். 8 வரை நவராத்திரி உத்ஸ்வம் நடைபெற்றது.

இதையொட்டி, செப். 29 முதல் அக். 6 வரை நாள்தோறும் காலை 4.45 மணிக்கு பள்ளி உணா்த்தல், 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், 6 மணிக்கு உஷ பூஜை, 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, 9.30 மணிக்கு பாயச பலி, 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, குருதி தா்பணம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மாலை தரிசனம், 6.30 மணிக்கு சந்தியா பூஜை, மஹா தீபாராதனை, 7 மணிக்கு சஹஸ்ரநாம அா்ச்சனை, 8.30 மணிக்கு இரவு பூஜை நடைபெற்றது.

அக். 6, 7, 8 தேதிகளில் பஞ்சவாத்தியத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை நவமி திருநாளில் மாலை 7 மணிக்கு பல்வேறு மலா்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு காப்புக்கட்டி விரதமிருந்த 108 பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. 11 மணிக்கு கோ பூஜை, பகல் 12-க்கு திக் பலி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, அக். 13 பௌா்ணமி அன்று மாலை 5 மணிக்கு ராஜகாளியம்மன் சன்னதி திறக்கப்படும். விழாவில் மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சூா்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com