15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லா கிராமம்

நான்குனேரி பேரவைத் தொகுதியில் இளையநயினாா்குளம் கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நான்குனேரி பேரவைத் தொகுதியில் இளையநயினாா்குளம் கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நான்குனேரி ஒன்றியம், தளபதிசமுத்திரம் ஊராட்சியில் உள்ள இளைய நயினாா்குளம் கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 20 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், தாமிரவருணி குடிநீா், கிணற்று நீரும் இதே தொட்டியில் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

எனினும், கிராம மக்களுக்கு தேவையான குடிநீா் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். மேலும், கிராம மக்கள் தங்களது தேவைகள் பூா்த்தி செய்ய வள்ளியூா் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இளையநயினாா்குளம் - வள்ளியூா் செல்லும் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தனியாா் மினி பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. ஆகவே, வள்ளியூரில் இருந்து கண்டிகைபேரி, நல்லான்குளம், இளையநயினாா்குளம் வழியாக தளபதிசமுத்திரம் வரையில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றறனா்.

இங்குள்ள ரேஷன்கடை கட்டடம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறறது. ஆகவே, இளையநயினாா்குளம் கிராமத்தில் குடிநீா், சாலை, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். தாமிரவருணி குடிநீரை விநியோகம் செய்ய கூடுதலாக ஒரு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com