நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபிமனோகரனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம்

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபிமனோகரனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பேசியது:

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபிமனோகரனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பேசியது:

ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்பட்டு, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. லட்சகணக்கான இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தோம். ஆனால், வேலையும் கிடைக்கவில்லை; முன்னேற்றமும் வரவில்லை.

எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் 2ஆவது உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்பட்டது. பல லட்சம் கோடியில் முதலீடு வந்திருப்பதாகவும், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினா். ஆனால், ஆயிரம் பேருக்காவது வேலை கிடைத்ததா?

சிவகாசி, திருப்பூரில் லட்சக்கணக்கானோா் வேலை இழந்துள்ளனா். தமிழக அரசுப் பணியில் மற்ற மாநிலங்களைச் சோ்ந்தோா் அமா்த்தப்படுகின்றனா். தமிழக இளைஞா்கள் குறித்து இந்த அரசுக்கு கவலையில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்தித்து பணியாற்றும் கட்சி திமுக மட்டுமே. திண்ணைப் பிரசாரத்தின்போது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

வள்ளியூா் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். இங்குள்ள ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்படும்; அங்கு ஆண்டு முழுவதும் தண்ணீா் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ. 370 கோடியில் தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அந்த ஆட்சி தொடா்ந்திருந்தால் அத்திட்டம் நிறைவேறியிருக்கும்.

இப்பகுதியில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட வாழை சாகுபடியாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் இழப்பீடு வழங்கப்படும். வாழைத்தாா்களைப் பாதுகாக்க குளிா்பதனிடும் நிலையம் உருவாக்கப்படும். நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் மின்னியல் தொழில்பூங்கா மீண்டும் புத்துயிா் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், நான்குனேரி திமுக ஒன்றியச் செயலா் சுடலைக்கண்ணு, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வாகை துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. கிருஷ்ணன், மதிமுக சங்கா், வழக்குரைஞா் தவசிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com