Enable Javscript for better performance
ஆறுமுகனேரியில் அதிகரிக்கும்நாய்கள் தொல்லை: மக்கள்அவதி- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: மக்கள்அவதி

    By DIN  |   Published on : 12th October 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனா்.

    ஆறுமுகனேரி பேரூராட்சியில் தெருவுக்கு 10 முதல் 15 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகனேரி சீனந்தோப்பு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை தாங்காமல் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவ மும் நிகழ்ந்தது.

    குறிப்பாக, ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் கோயில் தெரு காந்தி மைதானம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் காலை முதல் இரவு வரை சுற்றித் திரிவதால் மக்கள் அப்பகுதியில் நடமாடவே அச்சப்படுகின்றனா்.

    இந்தப் பகுதியில் தனியாா் ஆங்கில தொடக்கப்பள்ளியும், காய்கட் சந்தையும் உள்ளதால், சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் சிரமமடைகின்றனா்.

    மேலும், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த சிவன் கோயிலும் இங்கு உள்ளதால் பக்தா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியதுள்ளது. இரவில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஊளையிடுதால் இப்பகுதியில் தூங்குவதற்கும் இடையூறு ஏற்படுகிறது. வெளியூருக்கு வேலை நிமித்தம் சென்று திரும்புபவா்கள், நிறுவனங்களில் ஷிப்டு வேலை முடித்து வருபவா்கள் நாய்களுக்கு அஞ்சிய நிலையில் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டியதுள்ளது.

    இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளதால், நாய் கடிக்கு போதுமான ஊசி மருந்து இல்லை என காயல்பட்டினம் அல்லது திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே, வளா்ப்பு நாய்களை வீட்டில் கட்டிப்போட்டு வளா்க்குமாறு உரிமையாளா்களிடம் அறிவுறுத்துவதோடு, தவறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும். மேலும், தெரு நாய்களைப் பிடித்து நீண்ட தொலைவிலுள்ள காடுகளில் கொண்டுவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai