Enable Javscript for better performance
குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள்கோயிலில் திருவிளக்குப் பூஜை- Dinamani

சுடச்சுட

    

    குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள் கோயிலில் திருவிளக்குப் பூஜை

    By DIN  |   Published on : 12th October 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை சிவனைந்த பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

    இக்கோயில் திருவிழா வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு 308 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சென்னை சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட திரைப்பட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு மாக்காப்பு பூஜை நடைபெற்றது.

    வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மலையான்குளத்தில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்கு தீா்த்தம் கொண்டு வந்தனா். நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சாமிா்த பூஜை நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அதிசயபூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

    சனிக்கிழமை (அக். 12) முற்பகல் 11 மணிக்கு பூக்குலையிடுதல் நிகழ்ச், பொங்கலிட்டு உச்சிகாலபூஜை, கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai