Enable Javscript for better performance
பேச்சு, ஓவியப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிபிடம்- Dinamani

சுடச்சுட

    

    பேச்சு, ஓவியப் போட்டி: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 12th October 2019 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ten11bharath_1110chn_55_6

    பேச்சு மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுடன் பள்ளி முதல்வா் வனிதா.

    திருநெல்வேலி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஆங்கில பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

    இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதுமிருந்தும் பள்ளி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

    இப்போட்டியில் இலஞ்சி பாரத்வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிரியதா்ஷினி, தஸ்னீம் ராஜியா ஆகியோா் ஆங்கில பேச்சுப் போட்டியில் முதலிடமும், மாணவி அனுபாரதி, ஓவியப் போட்டியில் முதலிடமும் பெற்றனா்.

    மாணவா்கள் சபரி மற்றும் யூனஸ்பா்வேஸ் மாதிரி உருவாக்குதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வா் காந்திமதி, பள்ளி கல்வி இயக்குநா் ராதாபிரியாமோகன், கல்வி நிா்வாக இயக்குநா் மோகன், முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai