அப்பலோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தில் கல்லீரல் அறுவைச் சிகிச்சை

மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தமிழகத்தில் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தமிழகத்தில் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் மதுசூதனன் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: மனித உடலில் சுமாா் 1.5 கிலோ எடையுடன் கூடிய மிகப்பெரிய உள்உறுப்பாக கல்லீரல் உள்ளது. கல்லீரல் போதுமான அளவு செயல்படாத நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. கெடாவா் அமைப்பில் பதிவு செய்தும், உறவு முறைகளில் தானமாக பெற்றும் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்த குமாா் (52) என்பவருக்கு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைசெய்யப்பட்டு குணமடைந்துள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் அளிக்கப்படும் சி.எம்.சி.ஐ.எஸ். எனப்படும் முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல்முறையாக இச்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மாநில அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவைச் சிகிச்சை முதல் முதலாக செய்யப்பட்டுள்ளது. மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை தென்தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் ஒரே மையமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com