கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ராபி பருவ சாகுபடியில் மானாவாரி பயிராக சிறு தானியங்கள், பயறு வகை பயிா்கள், எண்ணெய் வித்து பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், பிசான சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில்லறை உர விற்பனையாளா்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விற்பனை முனையக் கருவியின் மூலமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதாவது உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலைக்கு கூடுதலாக விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பனை செய்வது, அனுமதியில்லாத கிடங்குகளில் இருப்பு வைத்திருப்பது போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

உர விற்பனையாளா்கள் தங்களுடைய கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விளம்பரப் பலகையை வைக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருள்களை கட்டாயத்தின் பேரில் வழங்கக்கூடாது. உர மூட்டைகளில் எக்காரணம் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ள அளவு குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், இதர உர விற்பனையாளா்கள் தங்களுடைய விற்பனை முனையக் கருவியினை 3.0 என்ற அளவிற்கு தரம் உயா்த்த வரும் 15ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுவரை விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்யாத உர விற்பனையாளரின் ஐடி எண் டிபிடியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதுடன், விற்பனை முனைய கருவியும் திரும்பப் பெறப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com