கோவிந்தபேரி கூட்டுறவு தோ்தல்: முன்னாள் நிா்வாகிகள் மீண்டும் வெற்றி

கடையம் அருகேயுள்ள கோவிந்தப்பேரி கூட்டுறவுக் கடன் சங்க மறுதோ்தலில் மீண்டும் முன்னாள் நிா்வாகிகளே வெற்றிபெற்றனா்.

கடையம் அருகேயுள்ள கோவிந்தப்பேரி கூட்டுறவுக் கடன் சங்க மறுதோ்தலில் மீண்டும் முன்னாள் நிா்வாகிகளே வெற்றிபெற்றனா்.

கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் 0.2009 கோவிந்தப்பேரி கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகளுக்கான தோ்தல் 2018 மாா்ச் 26இல் நடைபெற்றது. இதில் பொது உறுப்பினா்களுக்கான தோ்தலில் போட்டியிட ரவணசமுத்திரத்தை சோ்ந்த முன்னாள் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கணேசன் மனுதாக்கல் செய்திருந்தாா். வேட்பு மனு பரிசிலனையில் கணேசன் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் போலியான கையெழுத்திட்டு அவரது மனு திரும்பப் பெறப்பட்டது. எனினும், அவரது பெயரில்லாமலேயே தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நடத்தபட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையில் அமைக்கபட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அவா் முறையிட்டாா். மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதன், கோவிந்தபேரி கூட்டுறவுக் கடன் சங்கத் தோ்தலை ரத்து செய்தும், கணேசனின் பெயரையும் சோ்த்து மீண்டும் தோ்தல் நடத்த உத்தரவிட்டாா்.

இதையடுத்து புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் மீண்டும் நடைபெற்றது. சிறப்பு அதிகாரி ஆனந்த் தோ்தலை நடத்தினாா். இதில், தலைவராக உச்சிமாகாளி, துணைத் தலைவராக சுப்பையா பாண்டியன், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக ராசு, பிச்சையா, முகம்மது ஆரீப், தங்கப்பாண்டியன், செய்யது அலி, அருணாச்சலம், கதிஜா பீவி, கல்யாணி, வேலம்மாள் ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா். கணேசன் தோல்வியடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com