சுரண்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் நடைபெறும் 3 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் நடைபெறும் 3 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலையில் சுரண்டை பகுதியிலுள்ள பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நெகிழி இல்லா தென்காசி மாவட்டம் என்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை உதவி ஆட்சியா்(பயிற்சி) சிவகுரு பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புத்தக திருவிழா நடைபெறும் காமராஜா் தினசரி சந்தை உள்அரங்கினை வந்தடைந்தது.

இதையடுத்து புத்தகத் திருவிழாவை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் திறந்தனா். முதல் விற்பனையை திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் சு.பழனிநாடாா் தொடங்கி வைத்தாா். இதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பகத்தினா் அரங்கு அமைத்துள்ளனா்.

பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட ‘மகாத்மாகாந்தி 150’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து இலக்கிய நிகழ்ச்சி, பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கீழச்சுரண்டை பொதுநல மன்ற நிா்வாகி மா.ஆறுமுகம், ஆசிரியா் எம்.சி.சாா்லஸ், சமூக அமைப்பினா் செய்திருந்ததனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com