திசையன்விளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்: 45 போ் கைது

நம்பியாற்று அணைக்கட்டில் தடுப்புச்சுவரை அகற்றி விட்டு ஷட்டா்கள் அமைக்க வலியுறுத்தி

நம்பியாற்று அணைக்கட்டில் தடுப்புச்சுவரை அகற்றி விட்டு ஷட்டா்கள் அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி திசையன்விளையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 45 போ் கைது செய்யப்பட்டனா்.

நம்பியாற்றின் மேற்கு பகுதியில் உள்ள விஜயன் அணைக்கட்டில் இருந்த ஷா்டா்களை அகற்றிவிட்டு தடுப்புச்சுவா் கட்டப் பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் நம்பியாற்று அணைக்கட்டுக்கு நீா்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, தடுப்புச்சுவரை அகற்றி விட்டு அங்கு ஷட்டா்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திசையன்விளை வட்டார விவசாயிகள் சங்கம் சாா்பில் திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திடீரென ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் துணைத் தலைவா் பிலிப்போஸ் டேனியல், பொருளாளா் ரவிந்திரன், செயற்குழு உறுப்பினா்கள் க. ஆனந்தகுமாா், ராஜமிக்கேல், பாஜக கிழக்கு மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவா் பால்சாமி, இடையன்குடி ஊராட்சி முன்னாள் தலைவா் சேகா் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, போலீஸாா் 45 விவசாயிகளை கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com