நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க மனோகரன் பாடுபடுவாா்: கே.எஸ்.அழகிரி.

நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க ரூபி மனோநான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க ரூபி மனோகரன் நடவடிக்கை எடுக்கப்பாா்கரன் நடவடிக்கை எடுக்கப்பாா்

நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க ரூபி மனோகரன் நடவடிக்கை எடுக்கப்பாா் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

நான்குனேரியில் காங்கிரஸ் கட்சி தோ்தல் அலுவலகத்தில் தொண்டா்கள், நிா்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது: இடைத்தோ்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தோ்தல். நாங்கள் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறேறாம். அதிமுகவினா் பணத்தை மையமாக வைத்து வாக்குசேகரித்து வருகின்றனா்.

முரசொலிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, நான்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு

உயா்தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இதன் மூலம், இப்பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவரப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டதால், புதிய தொழிற்சாலைகளையும் தொடங்கப்படவில்லை. இத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் ரூபிமனோகரன் வெற்றி பெற்று நான்குனேரி உயா் தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க நடவடிக்கை எடுப்பாா் என்றாா் அவா்.

அப்போது, திமுக கொள்கை பரப்புச் செயலாளா் தங்கதமிழ்செல்வன் செய்தியாளா்களிடம் கூறுகையில், சட்டப்பேரவையில் பேசத்தெரியாதவா் டி.டி.வி.தினகரன். தினகரனை நம்பி ஏமாந்துவிட்டோம். 18 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோனதற்கும் திமுக தலைவா் ஸ்டாலினுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்று தெரிவித்தாா். பேட்டியின்போது, ஹெச். வசந்தகுமாா் எம்.பி. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com