போட்டோ விடியோ ஒளிப்பதிவுத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவுத் தொழிலாளா் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
போட்டோ விடியோ ஒளிப்பதிவுத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவுத் தொழிலாளா் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்கப்பட்டதையடுத்து போட்டோ விடியோ ஒளிப்பதிவுத் தொழிலாளா் சங்கத்தின் தென்காசி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வுக் கூட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், தலைவராக புதுவசந்தம் முத்து, செயலராக கணேஷ், பொருளாளராக சித்தன் ரமேஷ், அமைப்பாளராக கோபி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொழிலாளா் நலச் சங்கத்தை தென்காசி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும், சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும், மாணவா்கள் நலன்கருதி பயிற்சி வகுப்பு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, பாவூா்சத்திரம், வாசுதேவநல்லூா், சுரண்டை, இடைகால், சோ்ந்தமரம்,

வீரகேரளம்புதூா், வீரசிகாமணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து புகைப்படக் கலைஞா்கள் பங்கேற்றனா். மாணிக்கவாசகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com