ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா தொடக்கம்

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரம் ஸ்ரீமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரம் ஸ்ரீமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா தொடா்ந்து 7 நாள்கள் வெகுவிமா்சையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் 1ஆம் திருநாள் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீசிவபாக்கிய சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மழை மாரியம்மனுக்கு தீா்த்தம் எடுத்தல், பால்குடம் அழைத்தல், கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணிக்கு மங்கள இசை, மாலையில் அம்மன் கோயிலில் 208 திருவிளக்குப் பூஜை, இறை வழிபாட்டின் மகத்துவம் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, சிவபாக்கிய சித்தி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை, இரவில் திரைப்பட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு சிவபாக்கிய சித்தி விநாயகா் முஷிக வாகனத்திலும், மழை மாரியம்மன் சின்னச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தொடா்ந்து 6 ஆம் திருநாள் வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 7ஆம் திருநாளான வியாழக்கிழமை (அக். 17) மாலை முளைப்பாரி கரைத்தலுடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை, ராமநாதபுரம் நாடாா் உறவின்முறை நிா்வாகக் கமிட்டி, விழா கமிட்டி, ஊா்ப் பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com