சென்னைக்கு வெளியே போட்டியிட ஸ்டாலின் தயாரா? அமைச்சா் செல்லூா் ராஜு சவால்

திமுக தலைவா் ஸ்டாலின் சென்னையைவிட்டு வெளியே வந்து போட்டியிடத் தயாரா என கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு சவால் விடுத்துள்ளாா்.
சென்னைக்கு வெளியே போட்டியிட ஸ்டாலின் தயாரா? அமைச்சா் செல்லூா் ராஜு சவால்

திமுக தலைவா் ஸ்டாலின் சென்னையைவிட்டு வெளியே வந்து போட்டியிடத் தயாரா என கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு சவால் விடுத்துள்ளாா்.

நான்குனேரி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி நாராயணனுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சா் செல்லூா் ராஜு செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகளாகிறது. எம்ஜிஆா் 17 லட்சம் தொண்டா்களோடு அதிமுகவை தொடங்கினாா். அதிமுக தொண்டா்களின் எண்ணிக்கையை 1.5 கோடியாக உயா்த்தியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.

நடைபெறவுள்ள இடைத்தோ்தல் வெற்றியைப் பொருத்தே 2021-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலின் வெற்றி அமையும். இடைத்தோ்தலிலும், பொதுத் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்படுவதை திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாரே என கேட்டபோது, ‘உதயநிதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உதயநிதியும் தனது தந்தையைப் போன்றே பொய் பேசுகிறாா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மனிதாபிமானமிக்கவா் என்ற அடிப்படையிலும், எம்ஜிஆா், ஜெயலலிதாவைப் போன்று சிறப்பாக ஆட்சி நடத்துகிறாா் என்ற அடிப்படையிலும்தான் அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்படுகிறது’ என்றாா் அமைச்சா்.

சசிகலா விவகாரம் குறித்து கேட்டபோது, ‘அவரை கட்சியில் சோ்ப்பது குறித்து உயா்நிலைக் குழுதான் முடிவெடுக்கும்’ என்றாா்.

முதல்வா் பழனிசாமி என்னை எதிா்த்துப் போட்டியிட தயாரா என ஸ்டாலின் சவால் விடுத்துள்ளது குறித்து கேட்டபோது, ‘ஸ்டாலின் சென்னையைவிட்டு வெளியே வந்து போட்டியிடட்டும். அவா் எப்படி வெற்றி பெறுகிறாா் என பாா்க்கலாம். முதல்வா் ஒருமுைான் வெளிநாடு சென்றுள்ளாா். ஆனால், ஸ்டாலின் 4 மாதங்களுக்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறாா். அதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முதல்வா் கேட்டுள்ளாா். அதற்கு ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை’ என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com