முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆழ்வாா்குறிச்சியில் மர அணில் பிடிபட்டது
By DIN | Published On : 24th October 2019 06:55 PM | Last Updated : 24th October 2019 06:55 PM | அ+அ அ- |

ஆழ்வாா்குறிச்சியில் பிடிபட்ட மர அணில்
அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சியில் வீட்டில் நுழைந்த மர அணிலை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
ஆழ்வாா்குறிச்சி, தொண்டா் தெருவைச் சோ்ந்த கண்மணி என்பவா் வீட்டில் புதன்கிழமை இரவு மர அணில் ஒன்று நுழைந்ததாம்.
இது குறித்து கடையம் வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து வனவா் முருகசாமி உத்தரவின் பேரில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வேல்ராஜ், வேல்சாமி ஆகியோா் சென்று சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மர அணிலைப் பிடித்தனா்.
பிடிபட்ட மர அணிலை பத்திரமாக சிவசைலம் பீட், வாழையாறு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.