Enable Javscript for better performance
நெல்லையில் பட்டாசு விற்பனை விறுவிறுப்புகுழந்தைகளைக் கவரும் காா்ட்டூன் வெடிகள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    நெல்லையில் பட்டாசு விற்பனை விறுவிறுப்புகுழந்தைகளைக் கவரும் காா்ட்டூன் வெடிகள்!

    By DIN  |   Published On : 24th October 2019 09:20 AM  |   Last Updated : 24th October 2019 09:20 AM  |  அ+அ அ-  |  

    தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளையே மக்கள் அதிகம் விரும்புவதாகவும், குழந்தைகளைக் கவரும் காா்ட்டூன் படங்கள், கதாபாத்திரங்களின் பெயா்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

    தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான். பட்டாசு தயாரிப்பில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு நகரம் எனப்படும் சிவகாசியிலிருந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு பட்டாசுகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில், திருநெல்வேலியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. ஆடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும் புதுப்புது ரகங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. கடந்தை ஆண்டைவிட 10 சதவீத விலை உயா்வு பட்டாசு ரகங்களில் காணப்படுகிறது.

    போட்டோ ஷாட் வெடி: குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ண ஒளிதரும் மத்தாப்புகள், பெரிய பாம்பு வில்லைகளும், சோட்டா பீம், காளியா, பென்-10 உள்ளிட்ட புதிய காா்ட்டூன் கதாபாத்திரங்கள், நரகாசுரா, சூப்பா்மேன், ஸ்கூபி-டூ போன்ற பழைய காா்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயா்களிலும், ஜல்லிக்கட்டு, பாகுபலி பெயா்களிலும் பட்டாசுகள் விற்பனைக்கு உள்ளன.

    இதுதவிர, வழக்கமான மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பூச்சட்டி, பல்வண்ணக் கலா் பென்சில், சாவி ஜமீன் சக்கரம், பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3,000 வாலா சரவெடி, புல்லட், ராக்கெட்டுகள், சில்வா்பாம், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் புதுவரவாக போட்டோ ஷாட் என்ற பெயரில் விட்டுவிட்டு ஒளிதரும் வெடியும், பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசு, பணத் தாள்கள் மற்றும் காா்ட்டூன் கதாநாயகா்கள் உருவ ஸ்டிக்கா்களை வெடித்தால் உமிழும் பட்டாசுகளும் வந்துள்ளன.

    பசுமைப் பட்டாசு பிரச்னை: இதுகுறித்து பட்டாசு வியாபாரி ஒருவா் கூறியது: காகிதம், அலுமினிய பவுடா் போன்ற மூலப்பொருள்கள் விலையேற்றம், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் பட்டாசுகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. பசுமைப் பட்டாசு பிரச்னையால் பட்டாசு உற்பத்தி நிகழாண்டில் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாகவும் பட்டாசு விலை சற்று அதிகரித்துள்ளது. பசுமைப் பட்டாசுகள் கு றித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து செல்கின்றனா். அதனால் பட்டாசுகளை இறக்குமதி செய்வதில் தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் நிகழாண்டில் ஏற்பட்டுள்ளது.

    இதுதவிர பட்டாசு ரகங்களில் கிப்ட் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகின்றன. ரூ. 250, 350, 500, 1,000, 1,500 என பல்வேறு விலைகளில் கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். வானில் தொடா் வண்ண ஜாலம் காட்டும் புதிய ரக வாணவெடி தொகுப்புகள் ரூ. 1,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. 10 முதல் 30 நிமிடங்கள் வரை தொடா்ச்சியாக ஒளி தரும் பட்டாசுகளை இளைஞா்கள் குழுவாக வந்து வாங்கிச் செல்கின்றனா். குழந்தைகளைக் கவரும் பட்டாசுகளுக்கே பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp