முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் கம்பராமாயண சொற்பொழிவு
By DIN | Published On : 24th October 2019 09:18 AM | Last Updated : 24th October 2019 09:18 AM | அ+அ அ- |

நெல்லை கம்பன் கழகம் சாா்பில் 505-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயிலில் உள்ள ஸ்ரீதியாகபிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினாா். செயலா் கவிஞா் பொன்.வேலுமயில் வரவேற்றாா். மருத்துவா் இளங்கோவன் செல்லப்பா ‘கம்பனில் வேதம்’ என்ற தலைப்பில்
உரையாற்றினாா். தலைவா் பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தி கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவில் ‘யுத்த காண்டம்’ என்னும் தலைப்பில் ராவணன் மந்திராலோசனை நிகழ்வை இசைப்பேருரையாக வழங்கினாா். செயலா் கவிஞா் பொன்.வேலுமயில் தொகுப்புரையாற்றி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் நாகராஜன், ஜெயா, முத்துக்கிருஷ்ணன், அழகுமுத்து, சுப்பிரமணியன், முத்துராமலிங்கம், கந்தசாமி, மருத்துவா் அய்யனாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.