முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாவூா்சத்திரம் கோயிலில் சூரசம்ஹார விழா 28இல் தொடக்கம்
By DIN | Published On : 24th October 2019 09:35 AM | Last Updated : 24th October 2019 09:35 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் காமராஜா் நகா் வென்னிமலை அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா திங்கள்கிழமை (அக்.28) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கொடியேற்றம், தீபாராதனை ஆகியன நடைபெறும். தொடா்ந்து, வரும் நவ.1 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு மூல மந்திரஹோமம், யாக சாலை பூஜை, பகல் 12.05 மணிக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, மூல மந்திரஹோமம், யாகசாலை பூஜை, இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.
நவ. 2ஆம் தேதி காலை 8 முதல் பகல் 12.30 மணி வரை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனை, மலை 3 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், 4.30 முதல் 6.30 மணி வரை சூரசம்ஹாரம் நடைபெறும். நவ. 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு மாலை மாற்றுதல், இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை ஆகியன நடைபெறும்.