முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
புதுப்பட குறுந்தகடுகள் விற்பனை: ஒருவா் கைது
By DIN | Published On : 24th October 2019 09:19 AM | Last Updated : 24th October 2019 09:19 AM | அ+அ அ- |

திசையன்விளையில் புதுப்பட குறுந்தகடுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வள்ளியூா் தனிப்பிரிவு போலிஸ் உதவி ஆய்வாளா் பிரபு பாஸ்கரன், தலைமைக் காவலா் நந்தகோபால் மற்றும் போலீஸாா் திசையன்விளை- உடன்குடி சாலையில் உள்ள குறுந்தகடுகள் விற்பனை செய்யும் கடையில் சோதனை நடத்தினா். அங்கு மறைத்து வைத்திருந்த அசுரன், நம்ம வீட்டு பிள்ளை, அருவம், காவியன், பௌவ்பௌவ் உள்ளிட்ட புதுப்பட குறுந்தகடுகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக ஜெபத்துரையை (48) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.