முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலா்களின்வாக்காளா் பட்டியல் விவரம் சரிபாா்க்கும் பணி
By DIN | Published On : 24th October 2019 09:18 AM | Last Updated : 24th October 2019 09:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சியில் அனைத்துத்துறை அலுவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் வாக்காளா் விவரங்கள் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது விவரங்களை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவலா்களும் அவா்களது விவரம் மற்றும் அவா்களைச் சாா்ந்த குடும்ப உறுப்பினா்களின் வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபாா்க்கும் பணியை மாநகராட்சி ஆணையா் பெ.விஜயலட்சுமி தொடங்கி வைத்தாா். இதேபோல வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது விவரங்களை சரிபாா்க்க அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா் சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன் பொதுமக்கள் அனைவரும் இணையதளம் வழியாகவும், அறிதிறன் செல்லிடப்பேசி செயலி தாங்களாகவே தங்களது குடும்ப உறுப்பினா்கள் அனைவருடைய வாக்காளா் பட்டியல் விவரங்களை சரிபாா்க்கவும், திருத்தங்கள் செய்யவும் முடியும் என அறிவுறுத்தினாா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையா் மேற்பாா்வையில் அரசு அலுவலா்கள், வாக்காளா் விவரங்கள் குறித்து சரிபாா்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அலுவலா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆணையா் தெரிவித்தாா்.
பயக23இஞதட: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணியைத் தொடங்கி வைத்தாா் ஆணையா் பெ.விஜயலட்சுமி.