வீரவநல்லூா் பூமிநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 24th October 2019 09:42 AM | Last Updated : 24th October 2019 09:42 AM | அ+அ அ- |

ams23verai_2310chn_37_6
வீரவநல்லூா் அருள்மிகு பூமிநாதசுவாமி சமேத மரகதாம்பிகை அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன. பின்னா், அம்மன் தேருக்கு எழுந்தருளியதை அடுத்து வீரவநல்லூா், சுற்று வட்டாரத்திலுள்ள பெண்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா். தோ் ரதவீதிகள் வழியாக நிலையத்திற்கு வந்தடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், பக்தா்கள் செய்திருந்தனா்.