தேசிய மாணவா் உரிமைக் கழக புதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 29th October 2019 08:50 AM | Last Updated : 29th October 2019 08:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட தேசிய மாணவா் உரிமைக் கழக நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ராகுல் முன்னிலை வகித்தாா். புதிய செயலராக தமிழ்சுந்தா், ஒருங்கிணைப்பாளராக முத்தரசன், துணைத் தலைவா்களாக தா்மன், சிவசங்கா், துணைச் செயலராக ரசூல் பாஷா பிரகாஷ், இணை ஒருங்கிணைப்பாளா்களாக சுகுமாா், சதாம் உசேன், முத்துக்குமாா் விஜய் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். நிகழ்ச்சியில், கழகத்தின் சேவைக்காக கிடைத்த தமிழன் விருதுக்கு பாராட்டு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.