Enable Javscript for better performance
ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st October 2019 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளியைச் சோ்ந்த மீனவா் இருதயராஜ், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பிரதீப், கிரீட்வின் ஆகியோா் ஏழு மாதங்களுக்கு முன்பு சவூதிஅரேபியாவுக்கு சென்று அங்குள்ள அப்துல் ஜலால் என்பவரது படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

    இதனிடையே, அக். 12 ஆம் இந்த மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றில் வழி தவறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவா்களை ஈரான் நாட்டு கடற்படையினா் பிடித்து சிறையில் அடைத்து விட்டனராம்.

    ஈரான் சிறையில் இருக்கும் மீனவா்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.எஸ். இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் மீனவா் இருதயராஜின் மனைவி ஷா்மிளா, குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai