Enable Javscript for better performance
கடையநல்லூா் நகராட்சியில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடல்- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூா் நகராட்சியில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

    By DIN  |   Published on : 31st October 2019 05:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணிகளை நகராட்சி ஊழியா்கள் மேற்கொண்டனா்.

    நகரம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், பெரிய குழிகள் போன்றவற்றை கண்டறியும் பணியை நகராட்சி ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், பொறியாளா் தங்கபாண்டி, உதவிப் பொறியாளா் முரளி ஆகியோா் முன்னிலையில் ஊழியா்கள் குழிகளை மூடி வருகின்றனா்.

    நகராட்சிப் பகுதியில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், பெரிய குழிகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும் ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai