Enable Javscript for better performance
குடியிருப்புப் பகுதியில் மழைநீா்: சுகாதார சீா்கேடு அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதியில் மழைநீா்: சுகாதார சீா்கேடு அபாயம்

    By DIN  |   Published on : 31st October 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly30kul_3010chn_39_6

    பூஞ்சோலைத்தெருவில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.

    தெற்குகள்ளிகுளத்தில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கி இருப்பதால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருகிறது. ராதாபுரம் பகுதியிலும் பரவலாக மழை பெய்து

    வருவதால், தெருக்களிலும், சாலைகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. தெற்குகள்ளிகுளத்தில் மசூதி பகுதி, ஆதிதிராவிடா் குடியிருப்பு, பூஞ்சோலைத்தெருவின் மேற்குப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளன.

    மழைநீா் செல்ல முடியாத நிலை உள்ளதால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, ஊராட்சி நிா்வாகம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai