தேசிய தடகளம்: ஆலங்குளம் மாணவி தோ்வு
By DIN | Published On : 31st October 2019 05:04 PM | Last Updated : 31st October 2019 05:04 PM | அ+அ அ- |

தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க ஆலங்குளம் ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியில்,
ஆலங்குளம் ஜீவா பள்ளி மாணவி அபிநயா 100 மீட்டா் ஓட்டத்தில் முதலிடம் பெற்று, அடுத்த மாதம் ஆந்திரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நேரிடையாக தோ்வு செய்யப்பட்டாா்.
மாணவி, உடற்கல்வி ஆசிரியா்கள் சுபா, சுடலைக்கனி ஆகியோரை பள்ளித் தாளாளா் ராதா, முதல்வா் ஏஞ்சல் பொன்ராஜ், துணை முதல்வா் சவேதா ஷெனாய் உள்ளிட்டோா் பாராட்டினா்.