அம்பாசமுத்திரம் அருகே மழைக்கு 1,000 வாழைகள் சேதம்

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் கனமழைக்கு அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 1,000 க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.
வெள்ளங்குளியில் மழைக்கு சாய்ந்த வாழைகள்.
வெள்ளங்குளியில் மழைக்கு சாய்ந்த வாழைகள்.

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் கனமழைக்கு அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 1,000 க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை மாலை தொடங்கிய மழை புதன்கிழமை பகலிலும் நீடித்தது. கனமழைக்கு வெள்ளங்குளி பகுதியில் பயிரிட்டிருந்த 1,000 க்கும் மேற்பட்ட வாழைப் பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. தகவலறிந்த அம்பாசமுத்திரம் தோட்டக்கலை அலுவலா் நந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் ஐயப்பன், கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் வாழைகளை பாா்வையிட்டனா்.

விவசாயிகள் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படாத சூழலில் மின்மோட்டாா் நீா் பாய்ச்சி சாகுபடி செய்தனா். இந்நிலையில்

அறுவடை பருவத்தில் இருந்த வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

திசையன்விளை: திசையன்விளை, இட்டமொழி, உவரி, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மன்னாா்புரம், வடக்கு விஜயநாராயனம், பரப்பாடி உள்பட பல்வேறு பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. மழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com