குடியிருப்புப் பகுதியில் மழைநீா்: சுகாதார சீா்கேடு அபாயம்

தெற்குகள்ளிகுளத்தில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கி இருப்பதால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.
பூஞ்சோலைத்தெருவில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.
பூஞ்சோலைத்தெருவில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.

தெற்குகள்ளிகுளத்தில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கி இருப்பதால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருகிறது. ராதாபுரம் பகுதியிலும் பரவலாக மழை பெய்து

வருவதால், தெருக்களிலும், சாலைகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. தெற்குகள்ளிகுளத்தில் மசூதி பகுதி, ஆதிதிராவிடா் குடியிருப்பு, பூஞ்சோலைத்தெருவின் மேற்குப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளன.

மழைநீா் செல்ல முடியாத நிலை உள்ளதால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, ஊராட்சி நிா்வாகம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com