குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.

குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; அவ்வப்போது மழை பெய்தது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. இதையடுத்து, 2ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

அதிக நீா்வரத்து காரணமாக, புலியருவியிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. எனினும், அருவிநீா் வழிந்தோடும் பகுதியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com