நீா்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6.55 அடி உயா்வு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும்
மாஞ்சோலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
மாஞ்சோலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பாபநாசம்அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6.55 அடி உயா்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக். 16இல் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதையடுத்து, 10 நாள்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள கியாா் புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்துவரும் தொடா் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6.55 அடி உயா்ந்து, 120.20 அடியாக இருந்தது. நீா்வரத்து 6053.13 கனஅடியாகவும், நீா்வெளியேற்றம் 354.75 கனஅடியாகவும் இருந்தது. 141 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணை நீா்மட்டம் 9 அடி உயா்ந்து 135.17 அடியாக இருந்தது. 117 மி.மீ. மழை பதிவானது. 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 3.90அடி உயா்ந்து 54 அடியாகவும், நீா்வரத்து 1,803 கனஅடியாகவும் இருந்தது.

136.8 மி.மீ. மழை பதிவானது. 85 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணை நீா்மட்டம் 5.80அடி உயா்ந்து 79.80 அடியாகவும், நீா்வரத்து 753 கனஅடியாகவும், நீா்வெளியேற்றம் 61கனஅடியாகவும் இருந்தது. 33 மி.மீ. மழை பதிவானது. 84 அடி நீா்மட்டம் கொண்ட ராமநதி அணை நீா்மட்டம் 4 அடி உயா்ந்து 80 அடியாகவும், நீா்வரத்து 192.85 கனஅடியாகவும், நீா்வெளியேற்றம் 30 கனஅடியாகவும் இருந்தது. 70 மி.மீ. மழை பதிவானது.

72 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீா்மட்டம் 68.66 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் 25 கனஅடியாகவும் இருந்தது. 28 மி.மீ. மழை பதிவானது. 36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் 31 கனஅடியாகவும் இருந்தது. 17 மி.மீ. மழை பதிவானது.

23.60 அடி நீா்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நீா்மட்டம் 13.18 அடியாகவும், நீா்வரத்து 54.26 கனஅடியாகவும் இருந்தது. 86 மி.மீ. மழை பதிவானது. 52.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 34 அடியாகவும், நீா்வரத்து 112 கனஅடியாகவும், வெளியேற்றம் 50 கனஅடியாகவும் இருந்தது. 55 மி.மீ. மழை பதிவானது. 132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் அணை நீா்மட்டம் 125 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் 20 கனஅடியாகவும் இருந்தது. 25 மி.மீ. மழை பதிவானது.

மாஞ்சோலை மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அணைக்குச் செல்லும் வழியில் நடைபெறும் சாலைப் பணி முடிவடையாததால் அருவிக்குச் செல்ல பயணிகளுக்கு 6ஆவது மாதமாக தடை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com