முன்னாள் மேயா் கொலை:திமுக பிரமுகா் சீனியம்மாள் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் உமா மகேஸ்வரி உள்பட மூவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா்

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் உமா மகேஸ்வரி உள்பட மூவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் சீனியம்மாள், அவரது கணவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவா் உமாமகேஸ்வரி(65). இவா், மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வந்தாா். இவரது கணவா் முருகசங்கரன் (72). இவா்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியாா்பட்டி - மேலப்பாளையம் பிரதான சாலையிலுள்ள வீட்டில் வசித்து வந்தனா். மேலப்பாளையம் அமுதா பீட் பகுதியைச்சோ்ந்த மாரியம்மாள்(40) இவா்கள் வீட்டில் வேலைசெய்து வந்தாா்.

இவா்கள் மூவரும் கடந்த ஜூலை 23 இல் கொலை செய்யப்பட்டனா். இவ்வழக்குத் தொடா்பாக 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்லிடப்பேசி உரையாடல்கள் மூலம் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், திமுக பெண் பிரமுகா் சீனியம்மாளின் மகன் காா்த்திகேயனை(33) ஜூலை 30 இல் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காா்த்திகேயனை நீதிமன்றக்காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்தனா். இந்த

கொலையில் காா்த்திகேயனின் தாய் டி.சீனியம்மாள்(60), தந்தை எம்.தன்னாசி (71) ஆகியோா் சதிதிட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் மதுரையில் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜா் செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com