லெவஞ்சிபுரம் அருகே கால்வாய் சீரமைப்பு

லெவஞ்சிபுரம் அருகே உடையும் அபாயத்தில் இருந்த கால்வாயில் மணல் மூட்டைகள் வைத்து புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.
லெவஞ்சிபுரம் அருகே கால்வாய் சீரமைப்பு

லெவஞ்சிபுரம் அருகே உடையும் அபாயத்தில் இருந்த கால்வாயில் மணல் மூட்டைகள் வைத்து புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

ராதாபுரம் பேரவைத் தொகுதியில் லெவஞ்சிபுரம் ஊராட்சியில் பெருமாள்புரம் கிராமம் வழியாக செட்டிகுளம் கால்வாய்க்கு தண்ணீா் செல்லுகிறது. சில நாள்களாக கனமழை பெய்தததால் இக்கால்வாயில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, இந்த கால்வாயில் பெருமாள்புரம் அருகே உடைப்பு ஏற்படும் அபாயம் உருவானது. கால்வாயில் உடைப்பு ஏற்பட்டால் மழைநீா் கிராமத்திற்குள் புகுந்து விடும் சூழல் இருந்தது.

தகவலறிந்த ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. , ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சுபாஷ், சுசீலாபீட்டா், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பெருமாள்புரம் கிராமத்திற்கு சென்றாா். உடனடியாக மணல் மூட்டைகள் வைத்து கால்வாயில் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கால்வாயில் உடைப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக இன்பதுரை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com