நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என நான்குனேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில்,  முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், ஹெச். வசந்தகுமார் எம்.பி, செய்திதொடர்பாளர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மாநில பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, கட்சியின் செயல்தலைவர் எஸ்.ஜெயக்குமார், திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். பழனிநாடார், மத்திய மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் தலைவர் எம். மோகன்குமாரராஜா, வட்டாரத் தலைவர்கள் வாகைதுரை ரவிச்சந்திரன், சுயம்புலிங்கதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தீர்மானங்கள்: நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலைஉடனடியாக நடத்த வேண்டும். நீர் நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்;
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க  வேண்டும். கல்வி கற்கவும், உயர்கல்வி பயிலமுடியாத குழந்தைகளுக்கு கட்சி சார்பில் உதவி செய்யவேண்டும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவிசெய்ய வேண்டும். நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்காத வகையில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். தூண்டில் வளைவு இல்லாத மீனவக் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com