சுடச்சுட

  
  therottam

  கடையம் அருகே சம்பன்குளத்தில் உள்ள அன்பு சமதருமபதி நாராயணசுவாமி கோயிலில் ஆவணித்  தேரோட்டம் நடைபெற்றது.
  இத்திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (செப். 6)  இரவு 7மணிக்கு  திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு அய்யா வைகுண்டர் திருக்கல்யாணம், 11 மணிக்கு குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டை ஆடுதல் நடைபெற்றது.  சனிக்கிழமை (செப். 7) இந்திர வாகனத்தில் அய்யா பவனியும்,  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குஅத்ரி மலையிலிருந்து சந்தனகுடம் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா வீதி உலா நடைபெற்றது. 
  திங்கள்கிழமை ஸ்ரீமன் நாராயணசுவாமி தேரோட்டம் நடைபெற்றது.  தேரோட்டத்தை பாலபிரஜாதிபதி அடிகளார் மற்றும் முன்னாள் ஊராட்சித்தலைவர் டி.பி.எம்.ரசூல் முஹம்மது வடம்பிடித்துத் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சம்பன்குளம்,அழகப்பபுரம், கல்யாணிபுரம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டனர். 
   ஏற்பாடுகளை அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai