"நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் டயாலிசிஸ் இயந்திரம் வரவில்லை'

கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு

கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டாகியும்  இதுவரை இயந்திரங்கள் நிறுவப்படவில்லை என முகமதுஅபூபக்கர் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியது:  கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி  மூலம் 2 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், கூடுதல் இயந்திரங்கள் தேவை என மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று,  பேரவைத் தொகுதி வளர்ச்சி நிதி  ரூ.14,72,740 ஒதுக்கி 2 டயாலிசிஸ் இயந்திரங்களும், ஒரு பல் மருத்துவ நாற்காலியும் (டெண்டல் சேர்)  வாங்குவதற்கு 7.8.18இல் பரிந்துரை செய்தேன். எனினும் இதுவரை யலாலிஸ் இயந்திரங்கள்  மருத்துவமனைக்கு வரவில்லை.  இதற்கிடையே, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் , இணை இயக்குநருக்கு 5-8-19ல் அனுப்பிய கடிதத்தில், தொடர்புடைய மருத்துவமனையிலிருந்து எந்தவிதமான நிதியும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றார் எம்எல்ஏ. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com