சுடச்சுட

    

    நாகர்கோவில்-மும்பை ரயிலில் திருட்டுகளைத் தடுக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 12th September 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் திருட்டுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுதொடர்பாக மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்ட மனு: நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இப்பயணிகளிடம் மயக்க பிஸ்கெட் கொடுத்தும், மயக்க மருந்து அடித்தும் கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த 9ஆம் தேதி இந்த ரயிலில் பயணித்த திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த அசரியா என்பவரின் குடும்பத்தினரின் பெட்டியை உடைத்து 450 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ராய்ச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    செகந்திராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட குண்டக்கல் கோட்டம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட சோலாப்பூர் கோட்டம் ஆகிய பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. எனவே, நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் தமிழக ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai