சுடச்சுட

  

  நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பொதுக்கூட்டம்

  By DIN  |   Published on : 12th September 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் திருநெல்வேலி மாவட்டம் புளியரை வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடையநல்லூரில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜகுரு, நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத் தலைவர் மாடசாமி, விவசாயி சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகம், மாநில துணைச் செயலர் விஜயமுருகன், மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில் உள்ளிட்டோர் பேசினர்.
  விவசாய நிலங்களை அழித்து அமையவுள்ள நான்குவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய வேண்டும். கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
  திருவேங்கடம்-சங்கரன்கோவில் வட்டத்தில் 2016-17ஆம் ஆண்டில் பாரத பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் நடராஜன், துணைச் செயலர் மருதையா, அச்சன்புதூர் மீராகனி, கடையநல்லூர் பாதுஷா, சாகுல்ஹமீது நிஜாமுதீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
  முன்னதாக பிரகதீஸ்வரர், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்ற நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai