சுடச்சுட

  

  மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ், தமாகா, பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  பாரதியாரின் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநில விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் வாகை கணேசன்,  மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  தமாகா சார்பில் மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இளைஞரணிச் செயலர் ஜெகந்நாத ராஜா, வர்த்தக அணித் தலைவர் புன்னகை, மகளிரணி மாவட்டத் தலைவர் செரீனா, மாவட்டச் செயலர் ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல, பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai