உவரியில் இறந்து ஒதுங்கிய திமிங்கலம் கடற்கரையில் புதைப்பு

உவரி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நீல திமிங்கலம் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு புதைக்கப்பட்டது.

உவரி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நீல திமிங்கலம் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு புதைக்கப்பட்டது.
உவரி கப்பல்மாதா ஆலயம் அருகே செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது.
 இது குறித்து  தகவல் அறிந்ததும் புதன்கிழமை காலை மாவட்ட வன அலுவலர்  திருமால், ரேஞ்சர் கருப்பையா, வனத்துறை உதவி ஆய்வாளர் குமார், உவரி கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் கோபி, மீன் வனத்துறை மேற்பார்வையாளர்  ஜெயகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் ஆகியோர் நீல திமிங்கலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து  கால்நடை மருத்துவர் கணேஷ்  உடற்கூறு ஆய்வு செய்தார். அதன் பின்பு கடற்கரையில் திமிங்கலம் புதைக்கப்பட்டது.   இந்த திமிங்கலம் இறந்து 15 நாள்களுக்கு மேல் இருக்கலாம் எனவும், கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com