சுடச்சுட

  

  "பழையபேட்டையில் 10 நாள்களுக்கு குறைவான குடிநீர் விநியோகம்'

  By DIN  |   Published on : 13th September 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழையபேட்டை வட்டாரப் பகுதிகளில் இம் மாதம் 16 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு குறைந்த  அளவில் குடிநீர் விநியோகிகம் செய்யப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக திருநெல்வேலி மண்டல உதவி ஆணையர் (பொ) டி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மண்டலத்தின்கீழ் வார்டு எண் 50 இல் உள்ள பழையபேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் பழையபேட்டை, சரோஜினிதெரு, நெல்லையாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இம் மாதம் 16 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு குறைந்த அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai